வீடியோ ஆதாரத்துடன் கையும் களவுமாக சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர்.. வைரலாகும் வீடியோ
திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லஞ்சம் வாங்கிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வழக்கு விசயமாக இரண்டு தரப்பினர் வந்திருந்தனர். அப்போது, ஆய்வாளர் மகேஸ்வரியிடம் ஒருவர் பணம் கொடுப்பதும், அதனை பெற்றுக்கொண்ட அவர் இது யார் தரப்புக்கு என கேட்க... அது பெண் தரப்புக்கு என கூறுவதும் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ மற்றும் அதனுடன் இளைஞர் பேசி வெளியிட்ட ஆடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து ஆய்வாளரிடம் கேட்டபோது, இந்த குற்றச்சாட்டுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.