பசு மாட்டிற்கு வளைகாப்பு.. 21 தட்டுகளில் சீர்வரிசை - 5 வகை உணவு - ஊர்மக்கள் நெகிழ்ச்சி
பசு மாட்டிற்கு வளைகாப்பு.. 21 தட்டுகளில் சீர்வரிசை - 5 வகை உணவு - ஊர்மக்கள் நெகிழ்ச்சி
திருப்பத்தூர் மாவட்டத்தில் சினையாக இருக்கும் பசு மாட்டிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்ட சம்பவம் ஊர் மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே வடக்குப்பட்டு ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் மோகனவேல். இவர் தனது பசுமாட்டிற்கு குண்டு மல்லி எனப் பெயரிட்டு, குடும்பத்தில் ஒருவராக செல்லமாக வளர்த்து வருகிறார். குண்டு மல்லி பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும் பெற்றுள்ளது. தற்போது குண்டு மல்லி 9 மாத சினையாக உள்ள நிலையில், அதற்கு வளைகாப்பு ஏற்பாடுகளை செய்தார் மோகனவேல். தேதி குறிக்கப்பட்டு, ஊர் மக்களுக்கு வளைகாப்பு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. மாட்டிற்கு வளைகாப்பு என்றதும், ஊர் மக்கள் ஆவலுடன் குண்டு மல்லியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வளைகாப்பு தினம் என்பதால், குண்டு மல்லியின் கொம்புகள் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மாலை மரியாதையுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது.