தனியார் காப்பகத்தில் முதியவர்களுக்கு நடந்த கொடுமை ... நாதக கட்சி நிர்வாகி கொடுத்த புகார்

Update: 2024-09-24 10:10 GMT

உதகை அருகே செயல்பட்டு வரும் தனியார் ஆதரவற்றோர் இல்லத்தில் முதியவர்களை துன்புறுத்துவதாக வந்த புகாரை அடுத்து, 3 பேர் குழுவை மாவட்ட ஆட்சியர் அமைத்துள்ளது.

முள்ளிக்கொரை பகுதியில் இயங்கி வரும் இந்த காப்பகத்தில் 33 பெண்கள் உள்பட 87 பேர் தங்கியுள்ளனர். இங்கு குடும்பத்தினரால் கைவிடபட்டவர்கள், உறவினர்கள் இன்றி தனியாக இருப்பவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இ ங்கு முதியவர்களை அடித்து துன்புறுத்துவதாகவும், இறந்தவர்களின் நிலம் மற்றும் வீடுகளை அபகரித்து வருவதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் புகார்கள் வந்துள்ளன. இதுமட்டுமன்றி, தமிழக அரசு வழங்கும் முதியோர் உதவி தொகை, மகளிர் உரிமைதொகை, விதவைகள் உதவி தொகைகளை ஆகியவற்றை காப்பக நிர்வாகிகள் பறித்துகொள்வதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி செல்வம், ஆதாரங்களுடன் புகார் மனு கொடுத்ததை அடுத்து, 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்