மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உணவு வழங்கும் தன்னார்வலர்களுக்கு தடை விதிக்கப்படுவதன் பின்னணியில், நடிகர் சூரியின் உணவகம் தலையீடு உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ராஜாஜி மருத்துவமனையில் பாதுகாப்பு காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மருத்துவமனையில் பொதுமக்களுக்கு உணவு வழங்க வந்த தன்னார்வலர்களை, விதிமுறைகளை எடுத்துக்கூறி வெளியேற்றினர். இதனால், ஏமாற்றமடைந்த பொதுமக்கள், நடிகர் சூரி நடத்தி வரும் உணவகத்தில் வியாபாரம் பாதிக்கப்படுவதால் இதுபோன்று தடை விதிப்பதாக குற்றம் சாட்டினர்.