3 மாத குழந்தை உயிரிழப்பு..கண்ணீர் விட்டு கதறிய தாய் - வேலூர் அருகே சோகம்

Update: 2023-08-03 16:52 GMT

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே, பாம்பு கடித்ததில், 3 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஒடுகத்தூர் அருகே ஆசனாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கண்ணியப்பன். இவரது மனைவி செல்வி கர்ப்பிணியாக இருந்த நிலையில், ஓ. ராஜபாளையத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு பிரசவத்திற்காக வந்துள்ளர். இந்த தம்பதிக்கு 3 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், வீட்டில் குழந்தையின் அலறல் சத்தம் கேட்கவே, அலறியடித்துக் கொண்டு செல்வி வந்து பார்த்தபோது, பாம்பு ஒன்று குழந்தையை கடித்துக் கொன்றிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர். குழந்தையை இழந்து தவிக்கும் தாய் செல்வி, கண்ணீர் விட்டு கதறியது கண்கலங்கச் செய்தது.

Tags:    

மேலும் செய்திகள்