பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்புக்கு கூடுதல் கவனம் - பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் பாதுகாப்புக்கு கூடுதல் கவனம் செலுத்திடவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் பாதுகாப்புக்கு கூடுதல் கவனம் செலுத்திடவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்,
பள்ளி வளாகத்தில் புதிய கட்டிடங்கள் கட்டும் இடங்களுக்கு, மாணவர்கள் செல்ல தடை விதிக்க வேண்டும், அந்த இடங்களில் தடுப்பு அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
திறந்த நிலை கிணறுகள், நீர்நிலை தொட்டிகள், இடிந்து விடும் நிலையில் உள்ள கட்டிடங்கள் ஏதேனும் இருப்பின், அதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகள் பாதுகாப்பாக உள்ளனவா என ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூடப்பட்ட ஆழ்துளை கிணறுகள் மற்றும் தொட்டிகள் உள்ள இடங்களை சிறப்பு குறியிட்டு, தனியாக அடையாளப்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள உயர் மின்னழுத்த மின்கம்பங்கள் மற்றும் அறுந்து தொங்கும் மின்கம்பிகள் இருந்தால்,அதை அகற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது
மாணவர்களுக்கு ஆழ்துளை கிணறுகள், ஏரி, குளங்கள், உள்ளிட்டவைகளின் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.