ஊராட்சிமன்ற தலைவர் மகன் கொலையான சம்பவம்...பாமக நிர்வாகி உட்பட 17 பேர் கைது

Update: 2023-08-15 05:03 GMT

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே எச்சூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் குமுதா டோமினிக். இவருடைய மகன் ஆல்பர்ட். எச்சூர் அருகே உள்ள பத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளின் கழிவுகள் எடுக்கும் பணி, மண் சப்ளை, மேன் பவர் சப்ளை பணிகள் என, ஆல்பர்ட் பல்வேறு தொழில்களை செய்து வந்துள்ளார். இதனால், அதே பகுதியை சேர்ந்த பாமக நிர்வாகி சுரேஷ் மற்றும் தனியார் நிறுவன உரிமையாளர் ஆகியோருக்கு தொழில் போட்டியில் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 5ம் தேதி, ஆல்பர்ட், எச்சூர் பகுதியில் 8 பேர் கொண்ட கும்பலால் வெடிகுண்டு வீசி மற்றும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பாமக நிர்வாகி சுரேஷ், தனியார் நிறுவன உரிமையாளர் செந்தில்குமார் என 17 பேரை போலீசார் கைது செய்தனர் பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், தனியார் நிறுவன உரிமையாளர் 75 லட்சம் ரூபாய் பணத்தை ஆல்பர்ட்டிடம் வாங்கி விட்டு ஏமாற்றியதாக தெரிகிறது. அப்போது பணத்தை திருப்பித் தருமாறு ஆல்பர்ட் தகராறில் ஈடுபட, செந்தில்குமார் மற்றும் சுரேஷ் ஆகியோர் ஒன்று சேர்ந்து கூலிப்படையை ஏவி கொன்றது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்