உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா அதிரிபுதிரி வெற்றி

Update: 2022-10-11 06:41 GMT

உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா அதிரிபுதிரி வெற்றி

டி20 உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு, மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெர்த்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது.

இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் அதிகபட்சமாக 52 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து பேட் செய்த மேற்கு ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி, பயிற்சி ஆட்டத்தில் வெற்றி பெற்றது.  

Tags:    

மேலும் செய்திகள்