இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு விராட் கோலி முன்னுதாரணமாக இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். விராட் கோலியின் ஃபிட்னஸைப் பாராட்டிய கம்பீர், வளர்ந்துவரும் இளம் வீரர்கள் கோலியிடம் இருந்து ஃபிட்னஸைக் கற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார். அழுத்தத்தைக் கையாண்டு ஸ்ட்ரைக் ரொடேட் செய்வதில் கோலி சிறப்பாக செயல்பட்டதாகவும் கம்பீர் பேசியுள்ளார்.