நாடு முழுதும் மாற்றம் - பாஜக வெளியிட்ட அதிரடி லிஸ்ட்

Update: 2024-07-06 15:43 GMT

நாடு முழுதும் மாற்றம் - பாஜக வெளியிட்ட அதிரடி லிஸ்ட்

24 மாநிலங்களுக்கு பாஜகவின் பொறுப்பாளர்களை நியமித்து பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் பாஜக பொறுப்பாளராக நிர்மல் குமார் சுரானா நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேரளாவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர், கர்நாடகாவுக்கு ராதா மோகன் ராசும், இணை பொறுப்பாளராக சுதாகர் ரெட்டியும் நியமிக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் முன்னாள் முதல்வராக இருந்த விஜய் ரூபாணி, பஞ்சாப் மாநில பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வடகிழக்கு மாநிலங்களின் ஒருங்கிணைப்பாளராக ஒடிசா மாநில பாஜக எம்பி சம்பித் பாத்ராவும், இணை ஒருங்கிணைப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் வி. முரளிதரனும் நியமிக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் புதிய தேசிய தலைவர் விரைவில் நியமிக்க பட இருப்பதாக எதிர்பார்க்கப்படும் நிலையில், பல்வேறு மாநிலங்களுக்கும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்