பிரதமரின் மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம்.. தமிழகத்தில் எப்படி பெறுவது? இதோ விளக்கம் | PM Scheme
வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் மத்திய அரசின் சோலார் பேனல் பொருத்தும் திட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எப்படி விண்ணப்பிப்பது என்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, https://pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில், சோலார் நிறுவுவதற்கான விண்ணப்பத்தை நுகர்வோர்கள் பதிவு செய்ய வேண்டும் என்றும்,
பதிவு செய்தவுடன், இணையதளத்தில் உள்ளே சென்று, சோலார் நிறுவுவதற்கான விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரரின் வீட்டில் சோலார் பேனல் நிறுவுவதற்கு சாத்தியமுள்ளது என்று ஒப்புதல் அளிக்கப்பட்ட பின், மின்சார வாரியத்தில் பதிவு செய்துள்ள அட்டவணைப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் வாயிலாக சோலார் பேனலை அமைத்துக் கொள்ளலாம் என்றும்,
அவ்வாறு மின்தகடுகளை நிறுவிய பின், அது தொடர்பான விபரங்களை, இணையதளத்தில் பதிவு செய்து, மீட்டருக்காக விண்ணப்பிக்க வேண்டும் என்றும்,
மீட்டர் நிறுவப்பட்டு, மின்சேவை வழங்கும் நிறுவனம் ஆய்வு செய்து, இணையதளத்தில், மின்சார உற்பத்தி செய்வதற்கான அனுமதி சான்றிதழை வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.