40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.ராகுல் காந்தி பங்கேற்றுள்ள பாரத் ஜோடோ நியாய யாத்திரை 50வது நாளை எட்டியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் யாத்திரையில் பங்கேற்ற ராகுல் காந்திக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய ராகுல் காந்தி, பாகிஸ்தானைவிட இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டினார். பங்களாதேஷ், பூட்டானை காட்டிலும் இந்தியாவில் பெருமளவு இளைஞர்கள் வேலையின்றி தவிப்பதாகத் தெரிவித்தார். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரி விதிப்பு போன்றவற்றால் சிறுதொழில்களை பிரதமர் மோடி முடக்கியுள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். அக்னிவீர் யோஜனா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ராணுவ வீரர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாகவும், இது நியாயமற்றது என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்