பாடலாசிரியராக பிரதமர் மோடி - குவியும் லைக்ஸ்

Update: 2023-10-14 16:22 GMT

குஜராத்தி மொழியில் பிரதமர் மோடி எழுதிய கவிதை வரிகளில், பிரபல பாலிவுட் பாடகி த்வனி பனுஷாலி குரலில் வெளியாகியுள்ள 'கார்போ' பாடல் தற்போது இணையத்தில் லைக்ஸ்களை அள்ளி வருகிறது. நவராத்திரி முன்னிட்டு, நாட்டின் கலாச்சாரம் மற்றும் பன்முகத் தன்மையை எடுத்துரைக்கும் விதமாக இந்த ஆல்பம் பாடல் அமைந்திருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதற்கு முன்பு கடந்த 2019 ஆம் ஆண்டு, பிரதமர் மோடி எழுதிய 'Shyam Ke Rogan Rele' என்ற கவிதையும் பாடலாக வெளியாகி, பலரையும் வெகுவாக ரசிக்க வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்