ஆற்றில் மிதந்த Ex MLA சகோதரர் உடல்... மகளுக்கு சென்ற கடைசி மெசேஜ்-காட்டி கொடுத்த கார்-ஷாக் சம்பவம்

Update: 2024-10-07 14:22 GMT

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் மும்தாஜ் அலி. பிரபல தொழிலதிபரான மும்தாஜ் அலி பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை தனது மகளுக்கு வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு மாயமானார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் அவர் ஒட்டி வந்த பிஎம்டபிள்யூ கார் கூளூர் பாலம் அருகே நின்றது.இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ஃபல்குனி ஆற்றில் தேடி வந்த நிலையில் அவரது சடலத்தைக் கண்டெடுத்தனர். மும்தாஜ் அலி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த மும்தாஜ் அலி முன்னாள் எம்.எல்.ஏ மொய்தீன் பாவாவின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Tags:    

மேலும் செய்திகள்