மேகாலயாவில் ஒலித்த இந்தி திணிப்பிற்க்கு எதிரான குரல் ரிப்ளை கொடுத்த ஜெகதீப் தங்கர்
அனைத்து இந்திய மொழிகளையும் நாம் மதிக்க வேண்டுமென மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கர் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் பேசிய திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. சாகேட் கோகலே, மேகாலயா சட்டப்பேரவையில் அம்மாநில ஆளுநர் ஹிந்தியில் உரையாற்றியதை சுட்டிக்காட்டி, அம்மாநில மக்களின் மீது ஹிந்தி திணிக்கப்படுவதாக குறிப்பிட்டார். இதனைத்தொடர்ந்து பேசிய ஜெகதீப் தங்கர், நமது மொழிகளில் ஆழமும் வரலாறும் இலக்கியமும் அடங்கி இருப்பதாகவும், அனைத்து மொழிகளையும் நாம் மதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இதற்கு அவையில் இருந்த திமுக எம்பி திருச்சி சிவா உள்ளிட்ட சில எம்பிக்கள் ஆட்சேபம் தெரிவித்து முழக்கம் எழுப்பினர்.