துளி கூட பயம் இல்லாமல் சிங்கத்தை பார்த்து ஊழியர் செய்த செயல் - இணையத்தை கலக்கும் காட்சிகள்
குஜராத் மாநிலம், பாவ் நகர் பகுதியில் உள்ள ஒரு தண்டவாளத்தின் மீது திடீரென சிங்கம் ஒன்று உலாவிக் கொண்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வனத்துறை ஊழியர் ஒருவர், கொஞ்சம் கூட பயமே இல்லாமல், ஏதோ ஒரு கால்நடையை விரட்டி விடுவதுபோல, சத்தமிட்டபடியே, சிங்கத்தை தண்டவாளத்தில் இருந்து விரட்டியது பேசுபொருளாகி உள்ளது. குஜராத்தில், அடிக்கடி ஆசியவகை சிங்கங்கள் ரயில்களில் அடிபட்டு இறந்து வரும் நிலையில், ரயிலின் இயக்கத்திற்கும், சிங்கத்திற்கும் எவ்வித பாதிப்பும் இன்றி, வனத்துறை ஊழியர் சாதுரியமாக செயல்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.