"எங்கும், எதிலும்.. கன்னடம் கட்டாயம்.." சாட்டையை சுழற்றிய சித்தராமையா - திரும்பிய தேசத்தின் கண்கள்
கர்நாடகாவில் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் கட்டாயம் 60 சதவீதம் கன்னட மொழி இடம் பெறவேண்டும் என்ற மசோதா கர்நாடக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் சித்தராமையா சட்டமன்றத்தில் மசோதாவைத் தாக்கல் செய்த நிலையில் பேரவையில் ஒரு மனதாக ஆதரவளிக்கப்பட்டது. தொடர்ந்து சட்ட மேலவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பப்படும்...