"இது மக்கள் மீதான அன்பு"அரசியலை 2 துண்டாக உடைத்த போப் பிரான்சிஸ்..பிரத்யேக பேட்டி
மெக்சிகோவில் உள்ள குவாடலூப் அன்னை திருநாளையொட்டி, போப் பிரான்சிஸ், மெக்சிகோ தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், தமது உடல்நலம், முதுமை, போர்கள், அரசியல் உள்ளிட்டவை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். செய்தியாளர் வாலண்டினா அலஸ்ராக் எழுப்பிய அரசியல் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போப் பிரான்சிஸ், அரசியல் என்பது சேவையின் மிக உயர்ந்த வடிவம் என்றார். மக்கள் மீதான அன்புதான் அரசியல் என்று குறிப்பிட்ட அவர், துரதிஷ்டவசமாக மோசமான அரசியல்வாதிகள் அதனை வணிகமாக மாற்றிவிட்டதாக தெரிவித்தார். வரலாற்றை உருவாக்கும் மிகச் சிறந்த ஜனநாயக படைப்பாளிகள் அரசியல்வாதிகள் என குறிப்பிட்ட அவர், சிறந்த அரசியல்வாதிகள், அரசியல் என்றால் என்ன என்ற மிகச் சிறந்த செய்தியை தருகிறார்கள் என்றும் கூறினார்.