ஆசை மகளின் இன்ஸ்டா ரீலை பார்த்த அப்பாவுக்கு பேரதிர்ச்சி.. வீட்டிற்கு வந்ததும் நடந்த பூஜை

Update: 2024-07-02 05:14 GMT

இன்ஸ்டா ரீல்சுக்காக சாலையில் சிகரெட் புகைத்துக் கொண்டே நடந்து சென்ற சிறுமியை வீட்டில் அவரது தந்தை அடித்துத் துவைத்த பரபரப்பு சம்பவம் மேற்கு வங்கத்தில் நடந்திருக்கிறது... ரீல்ஸ் மோகத்தால் சிக்கலில் சிக்கிக் கொள்ளும் இளசுகளுக்காக இந்த செய்தித் தொகுப்பு...

சமீப காலமாக இன்ஸ்டா மோகத்தால் இந்த 2கே கிட்ஸ்கள் எந்த எல்லைக்கும் செல்லும் அதிர்ச்சிகர சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன...

வண்டிக்கு 2 சக்கரங்கள் இருக்கும்போதும் ஒரு சக்கரத்தில் பைக் ஓட்டி வித்தை காட்டுவது...டைட்டானிக் ஜேக்-ரோஸைப் போல கைகளை விரித்துக் கொண்டு வண்டி ஓட்டுவது...பேண்ட்டிற்குள் பூரான் புகுந்ததைப் போல் இடுப்பை வளைத்து நெளித்து 8 போட்டுக் கொண்டே போவது...என்று இவர்கள் செய்யும் விபரீத சேட்டைகள் பதைபதைக்க வைக்கின்றன...

காற்று புகாத இடம் கூட இருந்து விடும்...ஆனால் தார் சாலையில் ...தண்டவாளத்தில்...அந்தரத்தில்...நீருக்குள் என இந்த புள்ளிங்கோ ரீல்ஸ் செய்யாத இடமே இல்லை என்று கூறலாம்...

இப்படி லைக்ஸிற்காக ஆசைப்பட்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி...சிகெரெட்டைப் புகைத்து "உஃப்" என்று ஊதிக் கொண்டே...பாக்கெட்டில் கைவைத்தபடி...ஸ்டைலாக சாலையில் நடந்து சென்று அதை இன்ஸ்டாவில் பதிவிட்டார்...

சிறுமியின் ரீல்ஸ் தீயாய்ப் பரவவே...இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தந்தை சிறுமியை புரட்டிப் புரட்டி அடித்துத் துவைத்து விட்டார்...

சிறுமியுடைய தந்தையின் நடவடிக்கைக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளன...

எப்படிப் பார்த்தாலும், லைக்ஸிற்கு ஆசைப்பட்டு ஆபத்தான வேலைகளில் ஈடுபடும் இளசுகள் பிடிபட்டால் சிறுவர்கள் என சொல்லி போலீசால் எச்சரிக்க மட்டுமே முடியும்...ஆனால் அவர்களை திருத்த வேண்டும் என்ற ஆயுதம் பெற்றோர் கைவசமே உள்ளது.. எவ்வளவு தூரம் சென்றாலும் கடிவாளத்தைத் தங்கள் கைகளில் வைத்திருக்காவிட்டால் குழந்தைகள் ஆபத்தில் சிக்கிக் கொள்வதைத் தடுக்க முடியாது என்பதைப் பெற்றோர்கள் நினைவில் கொள்ள வேண்டும்...

Tags:    

மேலும் செய்திகள்