இரவு 9மணி தலைப்புச் செய்திகள் (03-07-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-07-03 16:02 GMT

நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது என விருது வழங்கும் விழாவில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று பரபரப்பு பேச்சு...

புகார்களின் அடிப்படையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இருவரிடமும் அண்மையில் விசாரணை நடத்திய நிலையில் இன்று பரபரப்பு...

கள்ளக்குறிச்சியில் 65 பேர் பலியாக காரணமான விஷச்சாராயத்தில் 29 புள்ளி 7 சதவீதம் வரை மெத்தனால் கலந்திருந்ததாக தகவல்...

சென்னையில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் கல்வி விருது வழங்கும் விழாவில், நீட் தேர்வுக்கு எதிரான நடிகர் விஜய்யின் பேச்சு அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. விஜய்யின் கருத்துக்கு தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் வரவரேற்பு தெரிவித்துள்ளன. இதன் மூலம் பாஜக எதிர்ப்பு அரசியலை விஜய் கையில் எடுக்க உள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்து அரசியல் விமர்சகர்களிடம் பேசினோம்.. அண்மை தகவல்களுடன் இணைகின்றனர் செய்தியாளர்கள் சதீஷ்முருகன் மற்றும் விமல்ராஜ்...

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த 700க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நடிகர் விஜய் இன்று விருதுகளை வழங்கி கவுரவித்தார். இதுகுறித்து விருதுகளை பெற்ற மாணவர்களிடம் பேசினோம்... விழாவில் நடைபெற்ற நெகிழ்ச்சிகர நிகழ்வுகளை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

சதீஷ்முருகன், தவெகவின் கல்வி விருது வழங்கும் விழாவில் மொத்தம் எத்தனை மாணவர்கள் கவுரவிக்கப்பட்டுள்ளனர்? விஜயின் முதல் அரசியல் மாநாடு எப்போது நடைபெற உள்ளது..?

பார்படாஸில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியினர், நாளை அதிகாலை டெல்லி வந்தடைய உள்ளனர். இந்திய வீரர்கள் உலகக்கோப்பையுடன் நாளை பிரதமரை சந்திப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்