கள்ளகாதலுடன் உல்லாசம்..! பச்சிளம் குழந்தையை துண்டு துண்டாக வெட்டி வீசிய தாய்... கேரளாவில் கொடூர சம்பவம்

Update: 2023-07-29 04:41 GMT

திருவனந்தபுரம் அருகே அஞ்சுதெங்கு கடற்கரை கிராமப் பகுதியில், பிறந்த குழந்தையின் உடல் ஒன்று கை, கால்கள் உடைந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது, மீட்கப்பட்ட குழந்தையின் உடல், அஞ்சுதெங்கு பகுதியை சேர்ந்த ஜூலி என்ற பெண்ணின் குழந்தை என தெரியவந்தது. இதுதொடர்பாக ஜூலியிடம் போலீசார் தங்களது பாணியில் விசாரணை நடத்தியபோது, 12 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த ஜூலி, அதே பகுதியை சேர்ந்த இளைஞரிடம் தகாத உறவில் இருந்து வந்ததும், அதன் மூலம் கர்ப்பம் தரித்து குழந்தை பிறந்ததும் தெரியவந்தது. அக்கம்பக்கத்தினருக்கு தெரியவந்தால் அவதூறாக பேசுவார்கள் என பயந்த ஜூலி, வீட்டில் அழுத பச்சிளங் குழந்தையின் மூச்சை அடக்கி கொன்றது அதிர்ச்சியை எற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், உயிரிழந்த குழந்தையின் கை, கால்களை உடைத்து, வீட்டிலேயே புதைத்ததும், 2 நாட்களுக்குப் பிறகு புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து கடற்பகுதியில் வீசியதும் போலீசாரின் விசரணையில் அம்பலமானது. அதனைத் தொடர்ந்து, ஜூலியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்