"கரண்ட் ஒழுங்கா கொடுக்கமாட்டியா ..?" EB ஆபிஸுக்குள் முதலையை விட்ட விவசாயிகள் - அலறிய ஊழியர்கள்

Update: 2023-10-21 16:10 GMT

கர்நாடகாவில் முறையான மின்சாரம் வழங்கக்கோரி, மின்வாரிய அலுவலகத்திற்கு முதலையை கொண்டு வந்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

கர்நாடகாவில் நீர்மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, மின் பற்றாக்குறை ஏற்பட்டதால், விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்குவது பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக விவசாயிகள் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விஜயப்பூர் மாவட்டம், ரோனிஹாலா கிராமத்தில், கிருஷ்ணா ஆற்றில் இருந்து முதலை ஒன்று விவசாய நிலத்தின் அருகே நுழைந்தது. இதனை கிராம மக்கள் பிடித்து, மின் பகிர்மான நிலையத்திற்கு கொண்டு வந்து, முறையான மின்சாரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்சாரமின்றி நீர்பாய்ச்ச முடியாமல் நிலங்கள் வறண்டுபோயுள்ளதாகவும் தெரிவித்தனர். இரவில் மும்முனை மின்சாரம் வழங்குவதால், முதலை, பாம்பு, தேள்கடிக்கு ஆளாக நேரிடுவதாகவும் கூறினர். கோரிக்கைகளை பரிசீலிப்பதாக மின்துறை அதிகாரிகள் கூறியதை அடுத்து, வனத்துறையினரிடம் முதலை ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்