மருத்துவர்கள் போராட்டம்... வெளியான நிம்மதியான அறிவிப்பு
மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றதால், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனைத்து பிரிவுகளும் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து புதுச்சேரி ஜிப்மரில் மருத்துவர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், வெளிப்புற சிகிச்சை பிரிவு காலை 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செயல்பட்டு வந்த நிலையில், உச்சநீதிமன்ற அறிவுறுத்தலைத் தொடர்ந்து மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இந்நிலையில் ஜிப்மரில் உள்ள அனைத்து வெளிப்புற சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை அரங்குகள், ஆய்வகங்கள் மற்றும் ஸ்கேன் சேவைகள் உட்பட அனைத்து பிரிவுகள் வழக்கம் போல செயல்படும் என ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.