திடீரென கேட்ட பீப் சத்தம்..! அச்சத்தில் மக்கள் | Kerala

Update: 2024-12-22 02:02 GMT

கேரளாவில் இருசக்கர வாகனத்தில் இருந்த ஹெல்மெட்டில் இருந்து பீப் சத்தம் வந்ததால் வெடிகுண்டு என பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். எர்ணாகுளத்தில் ஹோட்டல் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக்கில் இருந்து சத்தம் வந்துள்ளது. அருகே சென்று பார்த்த போது அதில் இருந்த ஹெல்மெட்டில் இருந்து சத்தம் வந்தது உறுதியான நிலையில், பைக்கின் உரிமையாளர் ஹெல்மெட் தனக்கு சொந்தமானது இல்லை என தெரிவித்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பைக்கில் இருந்த மின்னணு கருவியை செயலிழக்க வைத்தனர். மேலும் அது வெடிகுண்டு இல்லை எனவும் போலீசார் தெரிவித்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்