`திருப்பதி விஐபி பிரேக் தரிசன டிக்கெட்' - இடையில் புகுந்து விளையாடிய பாதுகாப்பு படை வீரர்

Update: 2024-12-21 16:02 GMT

ஆந்திர சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரை கடிதங்களை பயன்படுத்தி திருப்பதி தேவஸ்தானத்திடமிருந்து விஐபி பிரேக் தரிசன டிக்கெட் வாங்கி, அவற்றை ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு பக்தர்களிடையே விற்பனை செய்த இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர் சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர் அந்த டிக்கெட்களை 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் விற்பனை செய்து பெருமளவு பணம் சம்பாதித்துள்ளார்.

சந்திரசேகரின் புரோக்கர் வேலை பற்றி பெங்களூரை சேர்ந்த ஜெகதீஷ் மற்றும் ஹைதராபாத்தை சேர்ந்த பக்தர்கள் சிலர் தேவஸ்தான விஜிலென்ஸ் துறைக்கு புகார் அளித்ததை தொடர்ந்து, எல்லை பாதுகாப்பு படை வீரரின் இந்த தில்லாலங்கடி வேலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்து அவரிடம் திருப்பதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்