அங்குள்ள புனித பீட்டர்ஸ் பசிலிகா தேவாலயத்தில் குழந்தை ஏசுவின் உருவம் திறந்து வைத்ததும், அங்கு பூச்செண்டுகள் வைக்கப்பட்டன. தொடர்ந்து சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. போப் பிரான்சிஸ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். பின்னர் சிறப்புரை ஆற்றிய போப் பிரான்சிஸ், அனைவரது மனதும் பெத்லஹேமில் உள்ளதாக கூறினார். போரின் காரணமாக அமைதியின் இளவரசர் மீண்டும் நிராகரிக்கப்படுவதாக தெரிவித்தார். அன்பு வரலாற்றை மாற்றும் என்ற போப், அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து மகிழ்ச்சி, நல்லிணக்கம், நீதியை வழங்குமாறு ஏசுவிடம் வேண்டுவதாக கூறினார். பின்னர், குழந்தை ஏசு உருவத்தை மடியில் ஏந்திச் சென்று, ஏசு பிறந்த இடத்தை குறிக்கும் குடிலில் வைத்தார்