காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவதை கண்டித்து, பெங்களூருவில் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூர் ஜெயநகர் பகுதியில் உள்ள மக்களவை உறுப்பினர் தேஜஸ்வி சூர்யாவின் அலுவலகம் முன்பு ஒன்று திரண்ட கன்னட அமைப்பினர், உடனடியாக காவிரி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.