"உ.பி-க்கு கடத்தப்பட்ட 95 குழந்தைகள்..."அயோத்தியில் அதிர்ச்சி - அதிரடி காட்டிய அதிகாரிகள்

Update: 2024-04-27 07:11 GMT

பீகாரிலிருந்து சஹரன்பூருக்கு சட்டவிரோதமாக மைனர் குழந்தைகள் அழைத்துச் செல்லப்படுவதாகவும், அவர்கள் தற்போது கோரக்பூரில் இருப்பதாகவும், அயோத்தி வழியே செல்வதாகவும் தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் அவர்களை பத்திரமாக மீட்டனர்... குழந்தைகளை அழைத்துச் சென்றவர்களிடம் பெற்றோர்களிடம் இருந்து பெறப்பட்ட அனுமதி கடிதம் இல்லை. மீட்கப்பட்ட குழந்தைகள் 4 முதல் 12 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்... அவர்களில் பெரும்பாலோர் அவர்கள் எங்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்றே தெரியாத நிலையில், பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது...

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கனூங்கோ, தனது எக்ஸ் தள பதிவில், பீகாரில் இருந்து பிற மாநிலங்களில் உள்ள மதரசாக்களுக்கு அனுப்பப்பட்ட அப்பாவி குழந்தைகள் கோரக்பூரில் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஏழைக் குழந்தைகளை பிற மாநிலங்களுக்கு அழைத்துச் சென்று மதரசாக்களில் தங்க வைத்து மத அடிப்படையில் நன்கொடை பெறுவது அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் செயல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்