ஐதராபாத்தில் போலி சாவி தயாரித்து கொள்ளை - பெண் உள்பட 3 பேர் கைது
ஐதராபாத்தில் உறவினருக்கு அதிக அளவு தூக்க மாத்திரை கொடுத்து மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, வீட்டில் இருந்த விலை உயர்ந்த தங்க நகைகளை திருடி சென்ற பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வினய்குமாரி என்பவர் தன் மகளின் திருணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகையை 3 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று திருடி சென்றுவிட்டதாக நல்லக்குண்டா போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். புகார் தெரிவித்த வினய்குமாரியின் உறவினரான குஷ்பு நாயுடு இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். வினய்குமாரியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் குஷ்பு, போலியான சாவியை தயாரித்துள்ளார். வினய்குமாரி தூக்க மாத்திரை எடுத்துக்கொள்வதை அறிந்திருந்த குஷ்பு, கடந்த 19 ஆம் தேதி அதிக திறன் வாய்ந்த தூக்க மாத்திரைகளை கலந்துகொடுத்துள்ளார். இதையடுத்து, வினய்குமாரி சுயநினைவை இழந்ததை தொடர்ந்து, அவரது மகள், கீர்த்தியுடன் சேர்ந்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நேரத்தை பயன்படுத்திகொண்ட குஷ்பு, தன் கூட்டாளிகள் வம்சி கிருஷ்ணா, சூர்யா கிருஷ்ணா ஆகியோருடன் சேர்ந்து விலை உயர்ந்த நகைகளை திருடி சென்றுள்ளார்.