பிரம்மாண்ட இயக்குநர் என ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குநர் ஷங்கர் பிறந்த தினம் இன்று.
1963ல் கும்பகோணத்தில் பிறந்த ஷங்கர், பொறியியல் டிப்ளமோ முடித்துவிட்டு, சில காலம் டைப்ரைட்டர் உற்பத்தி நிறுவனம் ஒன்றில் பணி புரிந்தார்.
அவர் உருவாக்கி, நடித்த நாடகம் ஒன்றை பார்த்த இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், அவரை திரைப்பட வசன கர்த்தவாக அறிமுகம் செய்தார்.
எஸ்.ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக சேர்ந்து, பல்வேறு நுணுக்கங்களை கற்று தேர்ந்தார். எஸ்.ஏ.சந்திரசேகரின் படங்களில் துணை நடிகராக நடித்தார்.
1993ல் ஜென்டில்மேன் படத்தை எழுதி, இயக்கி, முதல்
படத்திலேயே மெகா ஹிட் கொடுத்தார். ஆனால் இட ஒதுக்கீடுக்கு எதிரான படம் என்று இதற்கு ஒரு பக்கம் எதிர்ப்பும் கிளம்பியது.
சமூக பிரச்சனைகளை சுவாரசியமாக காட்சிபடுத்திய ஷங்கர் படங்களுக்கு சுஜாதா வசனம் பக்கபலமாக இருந்தது.
இதனால் மூன்றாவது படத்திலேயே உலகநாயகனுடன் இணைந்தார் ஷங்கர். கதை திரைக்கதையோடு, மேக்கிங்கிலும் ஷங்கர் மிரட்ட, இந்தியா சார்பில் ஆஸ்கர் விழாவிற்கே சென்றது இந்தியன்.
படம் மட்டுமல்ல பாடல்களிலும் பிரம்மாண்டம் இருக்கும். ஜீன்ஸ் படத்தில் உலக அதிசயங்களை ஒரே பாடலில் கொண்டு வந்து தமிழ் ரசிகர்களை அதிசயிக்க செய்தார்.
விக்ரம் நடிப்பில் உருவான அன்னியன் திரைப்படம் ஹோலிவுட் தாண்டி, பாலிவுட்டிலும், டோலிவுட்டிலும் ஹிட் அடித்தது
ஆனாலும், இதில் கதாநாயகன், கருட புரணாத்தை
எடுத்துக் காட்டி, லஞ்சம், ஊழல் செய்பவர்களை,
கொலை செய்வதை நியாயப்படுத்தி பேசியதற்கு, பெரியார் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்
சூப்பர் ஸ்டாரோ டு சிவாஜி என்ற சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தவர், அடுத்து எந்திரன் மூலம் இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார்..
பிரம்மாண்டமன படங்களின் இயக்குனரான ஷங்கர், சொந்தமாக தயாரிக்கும் போது, சிறிய பட்ஜெட்டில், ஆழமான கதைகளை அழகாக சொல்லும் படங்களை சத்தமில்லாமல் வெளியிடுகிறார்.
காதல், இம்சை அரசன் 23ம் புலிகேசி, வெயில் படங்கள் இவரின் மற்றொரு அடையாளத்தை பேசுகின்றன.
பிரம்மாண்ட படங்களின் இயக்குநர் என வர்ணிக்கப்படும் இயக்குனர் ஷங்கர் பிறந்த தினம், 1963, ஆகஸ்ட் 17.