படத்தின் புரமோசனாக மாறிய காக்கா கழுகு கதை..கவனம் ஈர்க்கும் 80ஸ் பில்டப் படக்குழு வீடியோ
ரஜினிகாந்த், விஜய் கூறிய காக்கா கழுகு குட்டிக்கதையை 80ஸ் பில்டப் படக்குழு புரமோசனுக்கு பயன்படுத்தியது கவனத்தை ஈர்த்துள்ளது. கல்யாண் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள 80ஸ் பில்டப் படம் வரும் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் பேசிய வசனங்களுடன் 2K கிட்ஸ், 90கள் மற்றும் 80களில் ரசிகர்களின் வார்த்தை மோதலை மையமாக வைத்து படக்குழு புரமோசன் வீடியோவை வெளியிட்டது