ராஜ்கிரண் சொன்னது நடந்தது.. முனீஸ்ராஜாவின் சுயரூபம்.. லீக்கான ஆடியோ

Update: 2024-08-14 10:31 GMT

நடிகர் முனீஸ் ராஜா, நடிகர் ராஜ்கிரணின் மகள் பிரியாவை திருமணம் செய்த நிலையில், வேறு ஒரு பெண்ணை சாதியை காரணம் காட்டி திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாகவும், மற்றுமொரு பெண்ணை காதலித்து அவருடன் வாழ்ந்து வந்ததாகவும், மூன்றாவதாகவும் ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்து பின்னர் பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. முனீஸ் ராஜா, ராஜ்கிரண் மகள் பிரியாவை திருமணம் செய்து, சட்டப்படி பதிவு செய்யவில்லை என்றும், பிரியா பல பிரச்னைகளை சந்தித்து விட்டு மீண்டும் தனது தந்தை வீட்டுக்கே வந்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரியாவின் கையெழுத்தை போலியாக பயன்படுத்தி, முனீஸ் ராஜா கடன் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. முனீஸ் ராஜாவின் பின்னால் அவரது அண்ணன் நடிகர் சண்முக ராஜா, அவரது சகோதரி ரீட்டா பிரபா உள்ளதாக தெரிகிறது. ரீட்டா பிரபா கோவையில் ஏட்டாக பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்படி செல்லாத திருமணத்திற்கு விவாகரத்து வேண்டும் என்றால் 4 கோடி ரூபாய் வேண்டும் எனக்கூறி, முனீஸ்ராஜா-வும், அவரது உடன்பிறந்தவர்களும் நிபந்தனை விதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, முனீஸ்ராஜா, பெண்கள் சிலருடன் நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படும் நிலையில், அதுகுறித்த ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்