"பார்ட் 2க்கு வெயிட்டிங்" - ரஜினி போட்ட ட்விட்

Update: 2024-06-29 17:59 GMT

அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ் நடித்து வெளியான 'கல்கி 2898 AD' படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நாக் அஸ்வின் இயக்கிய கல்கி திரைப்படத்தை பார்த்ததாகவும், அருமையான காவியத் திரைப்படம் என்றும் பாராட்டியுள்ளார். இந்திய சினிமாவை அடுத்தகட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், கல்கி படத்தின் இரண்டாம் பாகத்திற்காக காத்திருப்பதாகவும் ரஜினி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்