மலையாள திரைப்பட நடிகர் சங்க தேர்தல்.. தலைவராக நடிகர் மோகன்லால் போட்டியின்றி தேர்வு
மலையாள திரைப்பட நடிகர் சங்கமான அம்மா அமைப்பின் பொதுக்கூட்டம் கொச்சியில் நடந்து வருகிறது. இதனிடையே, புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான வாக்களிப்பும் நடைபெற்றது. அதில், மோகன்லால் 3வது முறையாக போட்டியின்றித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பொருளாளர் பதவிக்கு உன்னி முகுந்தன் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச் செயலாளராக நடிகர் சித்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதேபோல் செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.