காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02-07-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
பாஜவினர் உண்மையான இந்துக்கள் அல்ல.. பிரதமர் மோடியோ, பாஜகவோ இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள் அல்ல... உண்மையான இந்து தர்மத்தை கூட பாஜக பின்பற்றுவதில்லை என குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் ராகுல்காந்தி பேச்சு...
ஒரே ஒரு குறிப்பிட்ட மதம் மட்டுமல்ல நமது அனைத்து மதங்களும் துணிச்சலை பற்றி தான் பேசுகின்றன... சிவபெருமான், குரு நானக், அபய முத்திரையை காட்டி பேசிய ராகுல்காந்திக்கு கடும் எதிர்ப்பு...
ராமர் பிறந்த மண்ணிலேயே பாஜகவிற்கு செய்தி வழங்கப்பட்டு விட்டது...அந்த செய்தி நமது கண் முன்னே அமர்ந்திருக்கிறது... அயோத்தியா என ராகுல் பேசியதும், மைக் அணைக்கப்பட்டதால் மக்களவையில் ராகுல்காந்தி ஆவேசம்...
ஒட்டுமொத்த தேசத்தையும் ராகுல் காந்தி அவமதித்து விட்டதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆவேசம்... நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தங்களை கர்வமுடன் இந்துக்கள் என்று கூறுவதாக பதிலடி...
ராகுல் காந்தி இந்துக்களை ஒருபோதும் அவமதித்தது கிடையாது... பாஜக குற்றச்சாட்டுக்கு பிரியங்கா காந்தி மறுப்பு ...
ராகுல் காந்தியின் பேச்சுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் எழுந்து நின்று எதிர்ப்பு... நாடாளுமன்றத்தில் ராகுல் எப்படி நடக்க வேண்டும் என டியூசன் எடுக்க ஆளும் தரப்பு கோரிக்கை...
மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சார்பில் வரும் 5-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்... வரும் 6-ம் தேதி உண்ணாவிரத போராட்டமும் நடைபெறும் என அறிவிப்பு...
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 25ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்...
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு... ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை மிரட்டி சொத்தை அபகரித்த புகாரில் சிபிசிஐடி நடவடிக்கை...
நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஆறுகளில் பாய்ந்தோடும் வெள்ளம்... கரையோர பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வருவாய்த் துறையினர் அறிவுறுத்தல்...
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி... 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அசத்தல்...
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் அல்கராஸ் போராடி வெற்றி பெற்றார்... எஸ்தோனிய வீரர் மார்க் லஜலை வீழ்த்தினார்...