நீங்கள் தேடியது "amazing news"
5 Jan 2019 10:20 PM IST
திருவாரூர் தொகுதியில் போட்டி கிடையாது - ஜெ. தீபா அதிரடி
திருவாரூர் இடைத்தேர்தலில், போட்டியிடப்போவதில்லை என்று எம்ஜிஆர்- அம்மா - தீபா பேரவை நிறுவனர் ஜெ. தீபா தெரிவித்துள்ளார்.
5 Jan 2019 10:18 PM IST
திருவாரூரில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுமா? : கமல்ஹாசனுக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம்
திருவாரூர் இடைத்தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரத்தை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு வழங்கி, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
5 Jan 2019 10:16 PM IST
மீனவர்களை காப்பாற்றும் கருவி : மாணவன் சாதனை
இயற்கை சீற்றங்களில் சிக்கி பாதிப்புக்குள்ளாகும் மீனவர்களை காப்பாற்றுவதற்காக சென்னை - புதுவண்ணாரப்பேட்டை மாநகராட்சி பள்ளியில், 10 - வது வகுப்பு படிக்கும் வில்சன் என்ற மாணவர் புதிய கருவியை கண்டுபிடித்துள்ளார்.
5 Jan 2019 9:59 PM IST
தினத்தந்தி வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி : மாணவ - மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு
திருப்பூரில் நடைபெற்ற தினத்தந்தி வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மாணவ - மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
5 Jan 2019 9:59 PM IST
நாடாளுமன்ற தேர்தல்: உ.பி.யில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கூட்டணி?
உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
5 Jan 2019 9:46 PM IST
அரசு பள்ளிகளில் ஆங்கில பயிற்சி வகுப்பு துவங்க கோரி வழக்கு
8 வாரத்தில் முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
5 Jan 2019 9:43 PM IST
வெளிநாடு தப்பிச்சென்ற பொருளாதார குற்றவாளி : முதன்முதலாக விஜய் மல்லையா பெயர் அறிவிப்பு
மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
5 Jan 2019 9:40 PM IST
மார்ச்சுக்குள் 2 கோடி இலவச கேஸ் இணைப்புகள் - மத்திய அரசு உத்தரவு
பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வரும் மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும் 2 கோடி இலவச கேஸ் இணைப்புகள் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
5 Jan 2019 9:37 PM IST
திருவாரூர் இடைத்தேர்தலை கண்டு பயப்படுகிறார்கள் - தினகரன்
தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க அச்சப்படுவதாக அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் தினகரன் விமர்சித்துள்ளார்.
5 Jan 2019 9:35 PM IST
சம்பள முரண்பாடுகள் : அறிக்கையை முதல்வரிடம் தாக்கல் செய்தார் ஐஏஎஸ் அதிகாரி சித்திக்
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் அறிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அளிக்கப்பட்டது.
5 Jan 2019 9:31 PM IST
பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி, சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.