மீனவர்களை காப்பாற்றும் கருவி : மாணவன் சாதனை
இயற்கை சீற்றங்களில் சிக்கி பாதிப்புக்குள்ளாகும் மீனவர்களை காப்பாற்றுவதற்காக சென்னை - புதுவண்ணாரப்பேட்டை மாநகராட்சி பள்ளியில், 10 - வது வகுப்பு படிக்கும் வில்சன் என்ற மாணவர் புதிய கருவியை கண்டுபிடித்துள்ளார்.
ரேடியோ அலைக்கற்றை மெக்கானிசம் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த கருவி, கையில் கட்டிக்கொள்ளும் வாட்ச் போல உள்ளது. இந்த கருவியில் உள்ள பட்டனை அழுத்தினால், இந்திய கடலோர காவல்படையினரின் மைக்ரோ கண்ட்ரோல் மூலம் எல்.இ.டி திரையில், எந்த இடத்தில் மீனவர் ஆபத்தில் சிக்கி இருக்கிறார்? என்பதை தெளிவாக காட்டுகிறது.
Next Story