சிங்கப்பூரில் நடைபெற்றுவரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 11வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் வெற்றிவாகை சூடினார். நடப்பு சாம்பியனான சீன வீரர் டிங் லிரெனுடன் குகேஷ் விளையாடி வருகிறார். 11வது சுற்றில் வெள்ளை நிறக் காய்களுடனும் லிரென் கருப்பு நிறக் காய்களுடனும் களமிறங்கினர். 29வது நகர்த்தலில் தவறாக மூவ் செய்த லிரென், உடனடியாக போட்டியில் இருந்து விலகினார். இதன்மூலம் 11வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார். 11 சுற்றுகளின் முடிவில் குகேஷ் 6 புள்ளிகளுடனும் லிரென் 5 புள்ளிகளுடனும் உள்ள நிலையில், தொடரில் இன்னும் 3 சுற்றுகள் எஞ்சி உள்ளது.