சீனாவில் பாரம்பரிய உடை அணிந்து பனிச்சருக்கில் ஈடுபட்ட காட்சி கவனத்தை ஈர்த்துள்ளது. ஜிலின் மாகாணத்தில் நடந்த இந்த நிகழ்வில், சீனாவின் பாரம்பரிய சிங்க உடை அணிந்த பனிச்சருக்கு வீரர்கள், பட்டாசுகளை வெடித்த படி பனியில் சருக்கி வந்தனர். ஒருவர் தீப்பொறியை சிதற விட்டபடி முன்செல்ல, மற்றவர்கள் அவரை பின்பற்றி சென்ற காட்சி வெகுவாக கவனத்தை ஈர்த்தது.