கூட்டத்திற்குள் புகுந்த கார்.. வானில் தூக்கி வீசப்பட்ட 200 பேர் - 5 பேர் பலி.. 40 பேர் கவலைக்கிடம்

Update: 2024-12-21 14:04 GMT

ஜெர்மனியின் மாக்டெபர்க் நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி போடப்பட்டிருந்த மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் நிறைந்திருந்தது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக பல்வேறு பொருட்களை மக்கள் வாங்கிக்கொண்டு நடந்தபோது கூட்டத்திற்குள் கார் ஒன்று மின்னல் வேகத்தில் மோதியது. கார் மோதிய வேகத்தில் பலர் வானில் தூக்கி வீசப்பட்டுள்ளனர். உடனடியாக அப்பகுதியை சுற்றி வளைத்த ஜெர்மனி போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். கிறிஸ்துமஸ் மார்க்கெட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர். 200-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கும் வேளையில் நடத்தப்பட்ட தாக்குதல் ஜெர்மனி மட்டுமல்லாது ஐரோப்பிய யூனியன் முழுவதும் பதற்றத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்