விண்ணை சூழ்ந்த கரும்புகை - ஊரையே அழித்த காட்டுத்தீ.. நரகமாய் மாறிய நகரம்
அமெரிக்காவின் ஒக்லஹோமா Oklahoma மாகாணத்தில், காட்டுத்தீ வேகமாகப் பரவி வருகிறது. தேசிய நெடுஞ்சாலையையொட்டிய பகுதியில் காட்டுத்தீயால் கரும்புகை வெளியேறியது. இதனை அவ்வழியாக காரில் சென்ற ஒருவர் படம்பிடித்துள்ளார்.
காட்டுத்தீயால் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டு, பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், வாகனப் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் வகையில், நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.