நார்வேவைச் சேர்ந்த நம்பர் ஒன் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் தனது நீண்ட நாள் காதலி எல்லா விக்டோரியாவை (Ella Victoria) திருமணம் செய்துகொண்டுள்ளார். ஓஸ்லோ நகரில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களின் திருமணம் நடந்துள்ளது. கார்ல்சன் பங்கேற்கும் சர்வதேசப் போட்டிகளில் எல்லா விக்டோரியா (Ella Victoria) தொடர்ச்சியாக வந்த நிலையில், இருவரும் தற்போது திருமணம் செய்துகொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.