கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ராஜினாமா அறிவிப்பை தொடர்ந்து, அமெரிக்காவின் 51வது மாகாணமாக தங்களது நாட்டை இணைத்துக் கொள்ள பெரும்பாலான கனடா மக்கள் விரும்புவதாக டிரம்ப் அதிரடியாக தெரிவித்துள்ளார். கனடாவில் நிலவும் நிதிச் சுமையை அறிந்தே, ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகி இருப்பதாகவும், அமெரிக்காவுடன் கனடா இணைந்தால் வரிகள் குறையும், தேவையற்ற கட்டணங்கள் இருக்காது எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.