வேகமாக பரவும் சீன HMPV வைரஸ்... செய்ய வேண்டியது என்ன..? - மூத்த விஞ்ஞானி சொன்ன அதிமுக்கிய தகவல்
வைரஸ் பரவலை கண்டு அச்சப்படத் தேவை இல்லை என, உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே அறியப்பட்ட இந்த வைரஸ், பெரும்பாலும் லேசான சுவாச நோய்த்தொற்றுகளை மட்டுமே ஏற்படுத்துவதாக விளக்கம் அளித்துள்ள அவர், சளியால் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். முகக்கவசம் அணிவது, கைகளை முறையாக கழுவுதல் போன்றவற்றை பின்பற்றவும் அறிவுறுத்தியுள்ளார். அதேசமயம், கடுமையான அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும் என சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
Next Story