உலகமே உற்றுநோக்கும் அந்த தருணம் - தேதி குறிக்கப்பட்டது..!

Update: 2025-01-07 02:38 GMT

அமெரிக்காவின் அடுத்த அதிபராக டிரம்ப் பதவியேற்பதற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அதிபர் தேர்தலின் இறுதிகட்ட நடைமுறையாக, டிரம்ப் அதிபராக பதவி ஏற்பதற்கு ஒப்புதல் அளிப்பதற்கான தீர்மானம் மீது நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் தலைமையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் டிரம்ப் அதிபராக பதவியேற்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. வரும் 20ம் தேதி அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்