உலகின் மிக வயதான பெண் காலமானார்

Update: 2025-01-05 13:14 GMT

உலகின் மிக வயதான பெண் தனது 116வது வயதில் காலமாகியுள்ளார்... ஜப்பானின் ஹியோகா மாகாணத்தைச் சேர்ந்த டோமிகோ இடூகா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டோமிகோவுக்கு 2 குழந்தைகளும் 5 பேரக் குழந்தைகளும் உள்ளனர். கணவர் இறந்த பின் ஒரு முதியோர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வந்த டோமிகோ தனது பதின்பருவத்தில் கைப்பந்து வீராங்கனையாக திகழ்ந்துள்ளார். 10 ஆயிரம் அடி உயரம் கொண்ட ஒன்டேக் மலையை 2 முறை ஏறி சாதித்துள்ளார். உலகின் மிக வயதான பெண் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற டோமிகோ மரணமடைந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது... இந்நிலையில் இனி பிரேசிலைச் சேர்ந்த கன்னியாஸ்திரியான இனா கானபரோ லூகாஸ் உலகின் வயதான பெண்மணி ஆகிறார்... இவர் டோமிகோவை விட 16 நாள்கள் இளையவர்.

Tags:    

மேலும் செய்திகள்