ஆப்கானிஸ்தானில் வீட்டில் ஜன்னல் வைக்க கூடாது..பறந்த அதிரடி உத்தரவு | Afganistan
ஆப்கானிஸ்தானில் வீடுகளில் ஜன்னல் வைக்கக்கூடாது என்று தலிபான் அரசாங்கம் புது உத்தரவை போட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியில் பெண் கல்விக்கு தடை, பொதுவெளியில் பெண்கள் பேசுவதற்கு தடை, ஊடகங்களில் பெண்கள் குரலுக்கு தடை என கொடூர தடைகள் தொடர்கிறது. இப்போது வீட்டில் பெண்கள் பயன்படுத்தும் அறைகளில் ஜன்னல் வைக்க தலிபான் தடை விதித்துள்ளது. சமையல் அறை, முற்றத்தில் வேலை பார்க்கும் பெண்களை ஆண்கள் பார்ப்பது குற்றம் என கூறியிருக்கும் தலிபான் அரசு, ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளில் இருக்கும் ஜன்னல்களை செங்கற்களை கொண்டு அடைக்க உத்தரவிட்டுள்ளது..