ஒரே நேரத்தில் 20 இடங்களில் பரவிய காட்டுத் தீ - உலகையே உறைய வைக்கும் காட்சி
தென்கொரியாவில் ஒரே சமயத்தில் 20 இடங்களில் பரவி வரும் காட்டுத் தீயால் அங்கு பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் இரண்டு தீயணைப்பு வீரர்களை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதுவரைகாட்டுத் தீக்கு சுமார் 275 ஹெக்டர் நிலங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.