கைகோர்த்த டிரம்ப்-புதின் - எதிரணியில் சீனா - எதிர்பாரா புது சிக்கல் | Putin

Update: 2025-02-25 13:44 GMT

பாதுகாப்புத்துறை பட்ஜெட்டை குறைக்க வேண்டும் என்ற டிரம்பின் பரிந்துரையை புதின் ஏற்றுள்ள நிலையில், சீனா நிராகரித்துள்ளது. டிரம்ப் பதவியேற்றதில் இருந்து, போரால் பொருளாதாரம் வீணாவதாக கூறி, இஸ்ரேல் ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டுவந்த‌தோடு, ரஷ்யா உக்ரைன் போரையும் முடிவுக்கு கொண்டுவர முயற்சி எடுத்து வருகிறார். இந்நிலையில், மிகப்பெரிய வல்லரசு நாடுகளான ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகியவை, பாதுகாப்புத்துறைக்கு ஒதுக்கும் நிதியை பாதியாக குறைக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தார். இதனை 'நல்ல பரிந்துரை' என்று வரவேற்றுள்ள ரஷ்ய அதிபர் புதின், அமெரிக்காவும் ரஷ்யாவும் 50 விழுக்காடு குறைக்கலாம் என்றும், விருப்ப‌ப்பட்டால் சீனாவும் தங்களுடன் இணைந்து பட்ஜெட்டை குறைக்லாம் என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கலந்தாலோசிக்கவும் தயாராக இருப்பதாகவும் புதின் கூறியுள்ளார். ஆனால், டிரம்பின் பரிந்துரைக்கு மறுப்பு தெரிவித்துள்ள சீனா, பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு என்பது 'முற்றிலும் அவசியமானது' என்று கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்