உலகையே மிரட்டும் ட்ரம்பை.. 1 மணிநேரம் புலம்பவிட்ட புதின் - மிரண்ட உலகம்

Update: 2025-03-19 17:09 GMT
உலகையே மிரட்டும் ட்ரம்பை.. 1 மணிநேரம் புலம்பவிட்ட புதின் - மிரண்ட உலகம்

உக்ரைன் ரஷ்யா போர் குறித்து தொலைபேசியில் விவாதிக்கும் முன்பு, ரஷ்ய அதிபர் புதின் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை 1 மணி நேரம் காக்க வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது... மாஸ்கோவில் வணிகர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட புதினுக்கு நிகழ்ச்சி தொகுப்பாளர் டிரம்ப்புடனான சந்திப்பு குறித்து நினைவூட்டினார்... அப்போது, அவர் சொல்வதையெல்லாம் கேட்காதீர்கள்...அவரது வேலையே அதுதான்...என்று பதில் கூறியதால் அங்கிருந்தவர்கள் வியப்படைந்தனர்...

டிரம்ப் என்ன சொல்லப் போகிறாரோ என தொகுப்பாளர் ஷோகின் சொல்லவே...மிகவும் சாதாரணமாக...“நான் டிரம்ப்பை பற்றி பேசவில்லை...க்ரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரியை பற்றித் தான் பேசினேன்“ என அலட்டிக் கொள்ளாமல் பதிலளித்தார் புதின்... அதன்பிறகு டிரம்ப்புடன் நடந்த பேச்சுவார்த்தையில் பகுதி போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு புதின் ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்